3
32
நான் “மூத்தவரே” என்றேன். “கூறு” என்றார் ஃபானு. “இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறது” என்றேன். ஃபானு என் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் முகம் மலர்ந்து “அது புகழ்பெற்ற நிலமாக இருக்கலாம். நமது மூதாதையர் அங்கிருந்து வந்திருக்கலாம்” என்றார். “இல்லை மூத்தவரே, பிறிதொன்று” என்றேன். ”நீ புதிய ஐயங்கள் எதையும் எழுப்ப வேண்டியதில்லை. கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இங்கிருந்து நாம் கிளம்பும் செய்தியை சென்று சொல்” என்றார். தலைவணங்கி “ஆணை!” என்றேன்.உளச்சோர்வுடன் நான் கிருதவர்மனை சந்திக்கச் சென்றேன். அவர்கள் இருவரும் துவாரகையிலிருந்து கருவூலம் ஏற்றிய வண்டிகளுடன் சேர்ந்துகொண்டார்கள்.
நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன். இது அரசாணை