1
7
குட்டி மஞ்சள் தக்காளி
பார்ப்பதற்கு செர்ரி தக்காளி (Cherry Tomato) மாதிரி இருந்தாலும் இது நாட்டுத் தக்காளி தான். நண்பர் பரமேசிடம் வாங்கிய விதைகளில் இதுவும் ஓன்று. நான் ‘குட்டி’ என்பதை சரியாக கவனிக்காமல் ‘மஞ்சள் தக்காளி’ என்பதை மட்டும் படித்து நிறைய செடிகளை போட்டு விட்டிருந்தேன். கொத்து கொத்தாய் பூக்கும் போதே இது சாதாரண தக்காளி மாதிரி இல்லையே என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிறகு விதை பாக்கெட்டை படித்து பார்த்ததில் ‘குட்டி மஞ்சள் தக்காளி’ என்றிருந்தது. நாட்டு தக்காளியில் இப்படி ஒரு வகை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தட்டில் வைத்துப் பார்த்தால் புதிதாய் ஏதோ ஸ்வீட் அடுக்கி வைத்த மாதிரி ஒரு அழகு. சாம்பாருக்கு ஒரு கை நிறைய அப்படியே அள்ளி போட்டுக் கொள்ளலாம்.
விட்டிருந்தேன். கொத்து கொத்தாய் பூக்கும் போதே இது சாதாரண தக்காளி மாதிரி இல்லையே என்று கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிறகு விதை