1
17
மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது. ஒருநண்பர் அதே கேள்வியை இங்கு கேட்கிறார்.
நவீன காலத்தில் சிரோ எனும் மேலை நாட்டவர் கண்டு பிடித்தாக சொல்லப்படும் நியுமரலாஜி பலரை பாடாய் படுத்துகிறது. ஒருவரின் நம்பிக்கையை பிறர் தாழ்வாக கூற கூடாது எனும் கருத்தை வைத்து பார்த்தல் நியுமரலாஜியை ஆராயக் கூடாது. உண்மையில் இது நம்பிக்கைசார்ந்தது. ஆய்வுக்கு உட்படுத்தினால் கடைசியில் முட்டாள் தனமானது என்றுசொல்லவேண்டும்.
"ஆலாஜி" எனும் வார்த்தை ஒரு விஷயத்தை அறிவியல் என காட்ட சிலவிஷமிகள் துவக்கியது எனலாம்... நாளை நீங்கள் படிக்கும் பழக்கம்தான்உங்களை செல்வந்தராக்கும் என கூறி அதற்கு "ரீடலாஜி" என்பார்கள்
உங்கள் தாய் தந்தை? செல்லம் -தம்பி என எதோ ஒரு செல்ல பெயர் அவர்கள்கூப்பிடுவார்கள்.