2
6
நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவரங்கம்
திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.
இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத
அளவுக்கு நெருக்கடி. திருமழிசை இருந்த காலத்தில் இந்த இடம் மிக ஒரு அருமையான இடமாய் இருந்து இருக்கும்.
வெண்திரை கருங்கடல் சிவந்து வேவ முன் ஒரு நாள்
திண் திறர் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே
பொருள்:
வெண்திரை = வெண்மையான நுரை கொண்ட
கருங்கடல் = கரிய கடலானது
சிவந்து வேவ = அரக்கர்கள் மற்றும் வானரங்கள் சண்டை இட்டபோது அவர்களின் இரத்தம்
கடலில் கலந்ததால் அந்த கடல் சிவந்து போக
முன் ஒரு நாள் = முன்பு ஒரு நாள்
சமயம், கருமையான ஞாயிறை போன்று இருந்த இராமனைப் பார்த்து சீதையின் முகம் மலரன்தது.