0
9
தெரியாமல் உன் கற்பை சந்தேகப் பட்டேன்" என்றோ "உலகுக்கு உன் கற்பை நிரூபிக்க தான் அப்படி செய்தேன்" என்றோ ஒன்னும் சொல்லவில்லை.
அவள் அருகில் வருகிறான். அக்னி தேவனைப் பார்த்து சொல்கிறான்....
அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ''யாதும் ஓர்
பழிப்பு இலள்'' என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன் - கருணை உள்ளத்தான்.
அழிப்பு இல = அழிக்க முடியாத
சான்று நீ = சாட்சி நீ (அக்னி சாட்சி)
உலகுக்கு = இந்த உலகத்துக்கு
ஆதலால் = ஆதலால்
இழிப்பு இல சொல்லி = இவளைப் பற்றி நீ ஒன்றும் இழிவாக சொல்லவில்லை
நீ இவளை = நீ இந்த சீதையை
'யாதும் ஓர் பழிப்பு இலள்'' என்றனை = எந்த ஒரு பழியும் இல்லாதவள் என்றனை