ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான்
நான் 42 கிலோ மீட்டர் ஓடவில்லை. நான் ஓடியது 21 கிலோ மீட்டர் தான். இந்த பந்தயத்தில் நான் திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை. 42 மற்றும் 21 கிலோ மீட்டர் ஓட்டம் ஒரே நேரத்தில் தொடங்கியது.சரியான கூட்டம். முந்தி செல்வதென்பது ஒரு போராட்டமாக இருந்தது. பதினாறு கிலோமீட்டர் வரை எதையுமே நினைக்காமல் முன்னால் ஓடியவர்கள் கால்களில் மட்டுமே கவனம் இருந்தது. ஆனால் நான் எப்போதும் ஓடும் வேகத்தில் ஓடவில்லை மிக மெதுவாகத்தான் ஓட முடிந்தது.
பதினாறு கிலோமீட்டருக்கு பிறகுதான் கவனம் ஓடிக்கொண்டிருந்த பாடலில் சென்றது. ஓடிக் கொண்டிருந்தது "கண்ணே கலைமானே". என்ன கொடுமடா என்று நினைத்துக் கொண்டேன்.இருந்தாலும் பாட்டை மாற்றவில்லை. பலவிதமான மனித முகங்கள். மற்ற வீரர்களை கவனிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு பல்வேறு வகையான உடைகள் சூக்கள் ,சாக்ஸ் மற்றும் ஓடும் ஸ்டைல். அப்படியே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே 21 கிலோமீட்டரை ஓடி முடித்தேன்.
Thanks for reading
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும்